என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் - சமந்தா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. #Irumbuthirai2 #Vishal
    விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.

    தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்துக்கு ஆந்திராவிலும் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை அள்ளியது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது.



    தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. 

    இதன் படப்பிடிப்பில் அடுத்த மாதத்தில் இருந்து விஷால் கலந்துகொள்கிறார். விஷால் நடிப்பில் அயோக்யா படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார். #Irumbuthirai2 #Vishal

    ‘ஜெயில்’ படத்தை தொடர்ந்து வசந்த பாலன் அடுத்ததாக விஷ்ணு விஷாலை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். #VishnuVishal #VasanthaBalan
    ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    இந்த நிலையில், வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அதில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.



    படப்பிடிப்பை அடுத்த மாதம் (மே) தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #VishnuVishal #VasanthaBalan

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக மும்பைக்கு கிளம்புவதற்கு முன்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். #Thalaivar168
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை துவங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் இன்று மும்பை புறப்பட்டு சென்றார்.

    அவர் மும்பை புறப்படுவதற்கு முன்பாக பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்த் இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.



    ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அடுத்த படத்தில் இருவரும் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Thalaivar168 #Rajinikanth #KSRaviKumar

    சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘குடிமகன்’ படத்தை இயக்குநர் பாக்யராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளர். #Kudimagan #Bhagyaraj
    ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘குடிமகன்’. “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருந்தார்.

    இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் மாஸ்டர் ஆகாஷ், பாவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.



    இப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, 

    ‘குடிமகன்’ திரைப்படத்திற்கு மூன்று வெற்றி கிடைத்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி. குடிப்பழக்கத்திற்கு ஆளானவருக்கு என்ன பிரச்சனை வரும் என்று குடும்பத்தை வைத்து சொல்லியிருக்கிறார். 

    இயக்குனர் சத்தீஷ்வரன் கதை மேல் வைத்திருந்த நம்பிக்கையை வைத்துதான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நம்பிக்கைக்கு ஏற்றார் போல் படம் வெளியாகி, எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார். #Kudimagan #Bhagyaraj

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். #Ayogya #Vishal
    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் அயோக்யா படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக படத்தை ஏப்ரல் 19-ல் வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது படம் வருகிற மே 10-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. #Ayogya #Vishal #Raashikhanna

    சலீம் பட இயக்குநர் என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Sasikumar #NVNirmalKumar
    விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர் என்.வி.நிர்மல்குமார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இவர் அடுத்ததாக அரவிந்த்சாமி - திரிஷாவை வைத்து சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.

    தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக அந்த படம் இன்னமும் ரிலீசாகாமல் உள்ளது. இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை நிர்மல்குமார் வெளியிட்டுள்ளார்.


    இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,

    எனது அடுத்த படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் எனது அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #Sasikumar #NVNirmalKumar

    கபீர்கான் இயக்கத்தில் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் 83 படத்திற்காக ஜீவாவுக்கு கபில்தேவ் பயிற்சியளித்து வருகிறார். #83TheMovie #Jiiva #Kabildev
    கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.

    இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிர்மானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    கபீர்கான் இயக்கும் இந்த படம் தோனி படத்தைபோல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட வேலைகள் தொடங்கி உள்ளன. லண்டனில் தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.



    நடிகர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கபில்தேவ் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

    மும்பையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கபில்தேவ் கலந்துகொண்ட கபில்தேவை நடிகர் ஜீவா சந்தித்து பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #83TheMovie #Jiiva #Kabildev

    டேவிட் எஃப் சான்ட்பெர்க் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `ஷசாம்' படத்தின் விமர்சனம். #Shazam #ShazamReview
    மாந்திரீக உலகத்தின் கடைசி மந்திரவாதி 7 தீய சக்திகளை அடக்கி அதனை காத்து வருகிறார். வருடங்கள் ஓடிப்போக தனது வயது முதிர்ச்சியின் காரணமாக அந்த தீய சக்திகளை பாதுகாக்க நல்ல எண்ணமுள்ள சாம்பியன் ஒருவனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    இதில் மந்திரவாதி சிறுவன் ஒருவனை சோதனைக்கு உட்படுத்துகிறார். சோதனையில் சிறுவன் தீயசக்திகளை விடுவிக்க முயற்சிக்கிறான். தக்க நேரத்தில் மந்திரவாதி சிறுவனை தடுத்து வெளியே அனுப்பிவிடுகிறார்.



    சில ஆண்டுகளுக்கு பிறகு, பெரிய ஆளாக மாறிய பிறகு மீண்டும் அந்த இடத்திற்கு போவதற்கான வழியை அறிந்து அங்கு சென்று தீய சக்திகளை விடுவிக்கிறான். தீய சக்திகள் அவன் உடலினுள் சென்று தீய சக்திகளின் அதிபதியாகிறான்.

    இதையடுத்து தீய சக்திகளை கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் பரீட்சை ஏதுமின்றி சிறுவன் ஒருவனை சாம்பியனாக தேர்ந்தெடுக்கிறார். அவர் ஷசாம் என்று அழைக்கப்படுகிறார். கடைசியில், ஷசாமுக்கும், தீய சக்திகளை இடையே நடக்கும் சண்டை என்னவானது என்பதே ஷசாமின் கதை.



    ஷசாம் வெகுளித்தனம் நிறைந்த காமெடி கதாபாத்திரத்தில் வருகிறார். சிறுவயதில் அம்மாவை பிரிந்த ஏக்கத்திலும், ஷசாமாக மாறும் போதும், மாறிய பிறகு செய்யும் குறும்புகளும் ரசிக்கும்படியாக சிரிக்க வைக்கின்றன. ஒரு சிறுவன் போல் தன்னை மாற்றிக் கொண்டு நடித்திருக்கும் சாச்சரி லீவிவுக்கு பாராட்டுக்கள். மார்க் ஸ்டிராங் வில்லத்தனத்தில் பாரபட்சமின்றி மிரட்டியிருக்கிறார். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

    பெற்றோரால் பாதிக்கப்படும் நாயகன், வில்லன் இருவருக்கும் இடையே நடக்கும் கதை. அதில் மாந்திரீகம், பாசம், காமெடி, சண்டை என அனைத்தும் கலந்த கலவையாக ஷசாமை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் டேவிட் எஃப் சான்ட்பெர்க். குறிப்பாக படம் முழுக்க முழுக்க காமெடியாகவே நகர்வது பாராட்டுக்குரியது. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.



    பெஞ்சமின் வால்பிச்சின் பின்னணி இசை, மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `ஷசாம்' சாகசம். #Shazam #ShazamReview

    சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆர்.கே.நகர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார் #RKNagar #Vaibhav
    பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    சில தவிர்க்க முடியாத காரணங்கள், செய்யாத தவறுக்காக, நாங்கள் நிறைய பிரச்சனையை சந்திக்கிறோம். தேர்தலுக்கு பிறகு தான் படம் ரிலீசாகும் என்று என்று சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட யாரையும் குறிப்பிட விரும்பவில்லை, படம் ரிலீசாகும் போது உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும். பிரச்சனை விரைவில் சரியாகும்.. இந்த படத்தில் கண்டிப்பாக அரசியல் இல்லை. யாரையும் குறிப்பிட்டு இந்த படத்தை உருவாக்கவில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான படம், எனவே தல பாணியில் சொல்ல வேண்டும் என்றால், வாழு, வாழவிடு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும், விதேஷ் கலை பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #RKNagar #Vaibhav

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்குகிறது.

    போஸ்டரில், மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயில் இடம்பெற்றிருப்பதுடன், போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது மும்பை என்ற எழுத்தும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், படம் மும்பை பின்னணியில் உருவாகுவதும், இதில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதும் உறுதியாகியுள்ளது.



    மேலும், நான் நல்லவனா இருக்கனுமா, கெட்டவனா இருக்கனுமா, இல்ல கேடு கெட்டவனா இருக்கனுமா என்பதை நீயே முடிவு செய் என்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

    படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார்.

    படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். #Thalaivar167 #ARM
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது ரஜினி நடிக்கும் 167-வது படமாகும். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. 



    இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் ‘கத்தி’ படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்க உள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

    படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு விரையில் வெளியிடும். ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Thalaivar167 #ARM
    ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வரும் நிலையில், புதிய படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. #SasiLalithaa
    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான இயக்குனர்கள் பட்டியலில் பாரதிராஜா, விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.

    பிரியதர்ஷினி முதல் ஆளாக தன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை அறிவித்தார். இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இந்தி நடிகைகள் வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இந்த கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் கங்கனா ரணாவத் நடிப்பது உறுதியானது. 

    இவை தவிர கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற தலைப்பில் இணைய தொடராக ஜெயலலிதா வாழ்க்கை படம் உருவாகிறது.



    தமிழ் இயக்குனர்களோடு தெலுங்கு இயக்குனர்களும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சி செய்து வருகின்றனர். தெலுங்கு பட உலகில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. இவர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சசிகலாவை முன்னிறுத்தி இயக்கப்போவதாக அறிவித்தார். சசிகலா என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே போஸ்டரில் பயன்படுத்தி இருந்தார்.

    இந்த படங்களுக்கு இடையே சசிலலிதா என்ற பெயரில், இன்னொரு படம் உருவாகிறது. தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்‘ நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம், இரண்டு பாகமாக உருவாகிறது. படத்தின் போஸ்டரில் ஜெயலலிதா சசிகலா இருவரின் படங்களும் உள்ளன. 
    ×