என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி யார் என்பதை மாளிகை பட விழாவில் கூறியிருக்கிறார். #Maaligai #VijayAntony
    ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாளிகை’. "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

    இதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அதன்பின் பேசிய அவர், ‘நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. 



    இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குனருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்றார்.
    ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை என்று இயக்குனர் விஜய், வாட்ச்மேன் படம் பற்றி கூறியிருக்கிறார். #Watchman #Vijay
    விஜய் வெவ்வேறு வகையிலான முயற்சிகளை செய்தாலும், அது வெறும் சோதனைகளாக மட்டும் நின்று விடாமல், அவரது திறமையை பறைசாற்றுகிறது. திரில்லர், வரலாற்று காதல் படம், நகைச்சுவை படங்கள் என வித்தியாசமான படங்களை கொடுத்த அவர், 'வாட்ச்மேன்' மூலம் புதிய ஒரு களத்தில் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    இப்படம் குறித்து விஜய் கூறும்போது, "துல்லியமாக சொல்வதென்றால், என் ஆரம்ப கட்டத்தில் இருந்தே வேறு வேறு வகையிலான திரைப்படங்களை உருவாக்க நான் முயற்சிக்கிறேன். பிரபலமான ஒரு ஹீரோவுடன் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு திரில்லர் படத்தை எடுக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. அது தான் இந்த படம் உருவாக ஒரு விதையாக இருந்தது. படத்தின் தலைப்பை வைத்தே படம் எந்த மாதிரியான படம் என்பதை ரசிகர்கள் யூகித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். 2 நாட்களில் நடக்கும் இந்த திரில்லர் கதையில் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையில் திரைக்கதை இருக்கும்" என்றார்.



    ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நாயகனாக நடிப்பதை பற்றி விஜய் கூறும்போது, "நானும், ஜி.வி.பிரகாஷும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வருகிறோம், கிட்டத்தட்ட 11 படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவருடைய இசை மிகச்சிறப்பாக இருக்கும். பாலா சார் இயக்கிய நாச்சியார் படத்தில் அவரை பார்த்து வியந்தேன். அவரை தவிர இந்த கதாபாத்திரத்துக்கு யாரையும் யோசிக்க முடியவில்லை. இந்த படத்திற்காக அவர் மிகவும் கடுமையான உழைத்தார். நிறைய ரிஸ்க் எடுத்தார். குறிப்பாக, ஒரு நாய் உடன் இணைந்து நடிக்க பொறுமை தேவை, ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை" என்றார்.

    ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்தின் பின்னணி இசைக்காக புதிய பாணியை முயற்சித்துள்ளார். அவரது விளம்பரப் பாடல் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளது. நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் ஒளிப்பதிவில், அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
    சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நட்பே துணை படத்தில் நடித்த அஸ்வின், கதாநாயகன் ஆதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். #NatpeThunai
    சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுதலை பெற்றவர் அஸ்வின். நெகடிவ் கதாபாத்திரம் போன்று ஆரம்பமாகி பின்னர் பாசிடிவ் கதாபாத்திரம் ஆதியின் நண்பராக நடித்திருந்தார்.

    இப்படம் குறித்து அஸ்வின் கூறும்போது, ‘நான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டு ஒரு ஹோட்டல் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்தேன். கை நிறைய சம்பளம். கெளரவமான வேலை. அத்துடன் டான்ஸ் ஸ்கூல், ஜிம் என்று நடத்திக் கொண்டிருந்தேன்.

    அந்த நேரத்தில் யானும் தீயவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போனது.



    அதன்பின் பஞ்சாட்சரம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன். அந்தப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. பின்னர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றேன். அதற்கான பரிசு நட்பே துணை படத்தில் கிடைத்தது. எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுத்த ஆதிக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதே மாதிரி தயாரிப்பாளர் சுந்தர்.சி சாருக்கும் குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். 

    என்னோட அப்பா ஜெரோம் புஷ்பராஜ் ஒரு லாயர்...அதோடு இல்லாமல் மியூசிக் டைரக்டர். அதனால் எனக்கு மியூசிக் ஆர்வம் அதிகம் நிறைய மியூசிக் ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். இப்போ வெப் சீரியல்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் இந்த கலைத்துறையில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.
    மாளிகை பட விழாவி பேசிய ஆண்ட்ரியா, அவர்களுக்கு தெரிந்தது, ஏன் இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார். #Andrea
    ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாளிகை’. "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

    இதில் ஆண்ட்ரியா பேசும்போது, ‘இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. 



    நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.
    கருவாப்பையா பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த கார்த்திகா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். #Karthika
    தூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து ‘கருவாப்பையா கருவாப்பையா’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை கார்த்திகா.

    தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரை சம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார். தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்து கொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.



    பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்களும் பேசி வருகிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.
    மலையாளத்தில் பிரேமம் படத்திலும், தமிழில் கொடி படத்திலும் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #Anupama
    மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பிரேமம் படத்தில் சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் ஆகியோர் அறிமுகமானார்கள். மூவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர்.

    இதில் சாய் பல்லவிக்கு படங்கள் குவிகிறது. மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்ததுபோல் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் அனுபமா. அந்த படம் பெரிதாக போகவில்லை.



    இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் விரக்தியாக இருக்கிறார். தெலுங்கில் நடித்த 4 படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி அவரை இன்னும் சோகமாக்கி உள்ளது.

    அனுபமாவிடம் ரசிகர்கள், ‘உங்கள் உடல் தோற்றம் குண்டாக இருப்பதால்தான் வாய்ப்பு வரவில்லை’ என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜிம்மிற்கு செல்லத் தொடங்கிய அனுபமா சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தினமும் 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஆனால், ஒரு சில ரசிகர்கள் நடிகை குண்டா இருப்பதால்தான் அழகாக இருக்கிறார். உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்க மாட்டார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
    தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் மாளிகை படத்தில் ஆண்ட்ரியாவுக்கு இரண்டு வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. #Maaligai #AndreaJeremiah
    ஆண்ட்ரியா, ‘தரமணி’, ‘அவள்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வடசென்னை’ போன்ற படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இதை தொடர்ந்து, தில் சத்யா இயக்கும் ‘மாளிகை’ படத்தில் இளவரசியாகவும், போலீசாகவும் நடிக்க இருக்கிறார்.

    ஆண்ட்ரியாவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து தில் சத்யா இயக்கிக்கொண்டிருக்கும் படம், ‘மாளிகை’. இந்தப் படத்தில், அவர் காவல் துறை அதிகாரியாகவும், கடந்த காலத்தின் இளவரசியாகவும் நடிக்க இருக்கிறார். படம்குறித்து தில் சத்யா அளித்துள்ள பேட்டியில், ’ஆக்‌‌ஷன், பேன்டசி, ஹாரர் என மூன்று ஜானர்களில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.



    ஆண்ட்ரியா நடிக்கும் இளவரசி கதாபாத்திரம், பேன்டசி பகுதியில் இடம்பெறும். அது, 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை. போலீசாக நடிக்கும் ஆண்ட்ரியா, ஒரு மாளிகைக்கு விசாரணைக்காகச் செல்கிறார்.

    அங்கு, அவருக்கு கடந்த கால நினைவுகள் ஞாபகத்துக்கு வருவதில் இருந்து படம் அப்படியே போகும்“ என்று தெரிவித்திருக்கிறார். கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், மனோ பாலா, ‘ஜாங்கிரி’ மதுமிதா போன்ற நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். படத்தின் டீசரை விஜய் ஆண்டனி வெளியிட்டு வாழ்த்தினார். #Maaligai #AndreaJeremiah

    அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். #Mankatha2 #AjithKumar #VenkatPrabhu
    அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படங்களில் மங்காத்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. வில்லத்தனமான சாயலில் உருவாக்கப்பட்ட அஜித்தின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதன்பின் எங்கு சென்றாலும் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்வியை எதிர்கொண்டு வருகிறார். அதற்கான பதிலை தற்போது அளித்துள்ளார்.

    அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு, “தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் உறுதியாகிவிடும்” என்று கூறியுள்ளார். இந்த படம் மங்காத்தா 2 ஆக இருக்கும் என்கிறார்கள்.



    முன்னதாக அஜித்துடன் சந்ததித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Mankatha2 #AjithKumar #VenkatPrabhu

    காஞ்சனா 3 படத்தில் DooPaaDoo தளம் மூலம் திறமையான இளைஞர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருப்பதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். #DooPaaDoo #MadhanKarky
    சுயாதீன இசை கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது DooPaaDoo. ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. 

    பாடலாசிரியரும், DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017-ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டூடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். 



    காஞ்சனா 3-ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDoo-வை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது." என்றார். #DooPaaDoo #MadhanKarky #Kanchana3 #RaghavaLawrence

    `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். #NerkondaPaarvai #AjithKumar
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்தது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனி கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,


    அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன், அவர் விரைவில் இந்தி படமொன்றில் நடிப்பார் என்று நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகளை கேட்டு வைத்திருக்கிறேன். அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #BoneyKapoor

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் துவங்கியது. #Darbar #Rajinikanth
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. மும்பையில் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. படத்தின் பூஜையில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 



    அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார்.

    படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh

    சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது அட்லி, ஷாருக்கான் இருவரும் சந்தித்த நிலையில், அவர் தளபதி 63 படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Thalapathy63
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படத்திற்காக பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று தயாராகி வருகிறது.

    விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



    படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அட்லி - ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #SharukhKhan #Atlee

    ×