என் மலர்

  நீங்கள் தேடியது "Kabhir Khan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கபீர்கான் இயக்கத்தில் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் 83 படத்திற்காக ஜீவாவுக்கு கபில்தேவ் பயிற்சியளித்து வருகிறார். #83TheMovie #Jiiva #Kabildev
  கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.

  இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிர்மானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

  கபீர்கான் இயக்கும் இந்த படம் தோனி படத்தைபோல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட வேலைகள் தொடங்கி உள்ளன. லண்டனில் தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.  நடிகர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கபில்தேவ் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

  மும்பையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கபில்தேவ் கலந்துகொண்ட கபில்தேவை நடிகர் ஜீவா சந்தித்து பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #83TheMovie #Jiiva #Kabildev

  ×