தொழில்நுட்பம்

ஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. ஸ்மார்ட்போன் டீசர்

Published On 2018-09-27 07:12 GMT   |   Update On 2018-09-27 07:12 GMT
எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க் ஸ்மார்ட்போனின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. #LGV40ThinQ



எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. 

அக்டோபர் 3-ம் தேதி அறிமுகமாக இருக்கும் புதிய வி40 தின்க் ஸ்மார்ட்போனில் மொத்தம் ஐந்து கேமராக்கள் வழங்கப்படுகிறது. மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் இரண்டு டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சேன்டு-பிளாஸ்ட் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், பயன்படுத்தும் போது மென்மையான உணர்வு ஏற்படும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் கீறல்கள், கைரேகை அச்சு அல்லது அழுக்கு போன்றவற்றை தவிர்க்கும் தன்மை கொண்டுள்ளது.

புதிய எல்.ஜி. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் மெட்டல் ஃபிரேம், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய பிளாட்டினம் கிரே, கார்மைன் ரெட் மற்றும் மொரக்கன் புளு உள்ளிட்ட நிறங்களை கொண்டுள்ளது. 

எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், ஒரே கையில் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 2 ~ 3எம்.எம். அளவில் இலுமினேஷன் சென்சார் மற்றும் லேசர் சென்சார் கேமராவின் முன் மற்றும் பின்புறம் வைக்கப்பட்டுள்ளது.

எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,

Tags:    

Similar News