தொழில்நுட்பம்

விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்

Published On 2017-02-28 04:41 GMT   |   Update On 2017-02-28 04:41 GMT
உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. புதிய அப்டேட் வியாபாரம் செய்வோருக்கானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:   

இந்திய டிஜிட்டல் வணிகத்திற்கு வாட்ஸ்அப் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்ற வகையில் வாட்ஸ்அப் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டன் மற்றும் இந்திய தொலைதொடர்பு மந்திரி ரவிஷங்கர் பிரசாத் இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவின் அடிப்படை குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் ஹைக், ஸ்நாப்சாட் மற்றும் வைபர் உள்ளிட்ட செயலிகள் போட்டியாக இருக்கிறது.  

உலக பிரபலமான வாட்ஸ்அப் செயலியை மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியை வணிக ரீதியில் வியாபாரங்களுக்காக அறிமுகம் செய்ய இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் வசூலித்து வந்த 1 டாலர் என்ற கட்டணத்தையும் தள்ளுபடி செய்து வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க துவங்கியது.    



செயலியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் எவ்வித மூன்றாம் தரப்பு விளம்பரங்களும் இடம்பெறாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியை வழங்கும் டூல்களை சோதனை செய்து வருவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் வாட்ஸ்அப் வழங்கிய புதிய அப்டேட்டில் ஸ்நாப்சாட்டில் ஏற்கனவே வழங்கப்பட்டதை போன்ற வசதி வழங்கப்பட்டது. பேஸ்புக் போன்றே புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் ஸ்டேட்டஸ் என்ற புதிய டேப் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது ஜிஃப், புகைப்படம் மற்றும் வீடியோக்களை செட் செய்ய வழி செய்கிறது. இவை 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News