தொழில்நுட்பம்

பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன் நல்லதா, கெட்டதா?

Published On 2017-01-22 10:09 GMT   |   Update On 2017-01-22 10:09 GMT
நீங்கள் வாங்க இருக்கும் ஸ்மார்ட்போனின் திரை பெரியதாக இருப்பது நல்லதா, அல்லது சிறிய திரை தான் வாங்க வேண்டுமா? இரண்டிலும் இருக்கும் வித்தியாசத்தை பற்றி இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவற்றின் திரை சார்ந்த வளர்ச்சியும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. துவக்கத்தில் 3.5 முதல் 4.0 இன்ச் திரை கொண்டிருந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய மொபைல் போன்களில் பெரிய அளவு திரை வழங்கப்பட்டு வருகிறது. 

இன்றைய மொபைல் போன்களின் திரை அளவு 4.7 முதல் 5.5 இன்ச் வரை இருக்கிறது. 5.5 இன்ச் அளவை கடந்து பெரிய திரை கொண்ட சாதனங்கள் ஃபேப்லெட் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன்களின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. சில ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு திரை அளவுகளும் வழங்கப்படுகின்றன. 

இவ்வாறன சமயங்களில் பெரிய திரை கொண்ட போன்களை வாங்கலாமா அல்லது மிகப்பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கலாமா என்ற ரீதியாக வாடிக்கையாளர்களுக்கு சந்தேகங்கள் எழும். இங்கு இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



அதிக தகவல்களை பார்க்க முடியும்:

மிகப்பெரிய திரை கொண்டுள்ள சாதனங்களில் அதிகப்படியான தகவல்களை ஒரே ஸ்வைப் மூலம் பார்க்க முடியும். இதோடு புகைப்படம், வீடியோ மற்றும் கேம் உள்ளிட்டவற்றை சிறப்பான அனுபவத்தில் பார்க்க முடியும். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனம் எனில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும். 

உண்மையான பலன் என்ன?

பெரிய திரை அளவு கொண்ட ஸ்மார்ட்போன் என்றால் அதன் வடிவம் பெரிதாகவே இருக்கும். பெரிய போனில் பெரிய பேட்டரியை வழங்க முடியும் என்பதால் இவற்றின் பேட்டரி பேக்கப் நேரம் அதிகமாக கிடைக்கும். இதோடு பெரிய திரை இருப்பதால் இரண்டு கை விரல்களை கொண்டு வேகமாக டைப் செய்ய முடியும். இதில் பிரச்சனை என்னவென்றால் பெரிய போனினை பாக்கெட்டில் வசதியாக வைத்து கொள்ள முடியாது. 

ஒரே கையில் பயன்படுத்த முடியும்:

பெரிய திரை ஸ்மார்ட்போன்களை ஒரே கையில் பயன்படுத்துவது கடினம் என்றாலும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் ஒரே கையில் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. இதனை செயல்படுத்தும் பட்சத்தில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போனையும் ஒரே கையில் பயன்படுத்தலாம். இதோடு ஒரே கையில் டைப் செய்ய உதவும் கீபோர்டு ஒன்றும் வழங்கப்படுகிறது. 

பேட்டரி பயன்பபாடு அதிகமாக இருக்கும்:

பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சிறிய திரை கொண்ட போன்களை விட அதிகளவு மின்சக்தியை பயன்படுத்தும். பெரிய பேட்டரி வழங்கப்படும் என்பதால் பெரிய திரை போன்களுக்கு மின்சக்தி வழங்கப்படும். இதில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் கொண்டுள்ள திரை கொண்டு அதன் பேட்டரி பேக்கப் நேரம் மாறுபடும். AMOLED பேனல்கள் TFT டிஸ்ப்ளேக்களை விட குறைந்தளவு மின்சக்தியை பயன்படுத்தும். இதே போல் IPS LCD பேனல்களும் அதிகளவு மின்சக்தியை பயன்படுத்தும். 

சரியான மொபைல் திரை அளவினை தேர்வு செய்ய வேண்டும்: 

உங்களுக்கு சரியன மொபைல் போன் திரையை கண்டறிவது மிகவும் எளிமையானது. இதனை கண்டறிய நீங்கள் வாங்கும் போனினை கையில் வைத்து பயன்படுத்தி பார்க்கலாம். உங்களுக்கு வசதியாக இருக்கும் திரை அளவினை தேர்வு செய்து கொள்ளலாம். இதோடு மொபைல் போனினை உள்ளங்கையில் வைத்து சுண்டு விரல் அளவை விட சிறியதாக இருக்கும் போனினை தேர்வு செய்யலாம். 

Similar News