தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் ஆப்பிள் ஏர்பாட்ஸ்: பயன்படுத்துவது எப்படி?

Published On 2016-12-30 13:06 GMT   |   Update On 2016-12-30 13:07 GMT
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனங்களிலும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஹெட்போன்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ஆப்பிள் ஐபோன்கள் வெளியிடப்பட்டு சில வார இடைவெளிக்கு பின் வயர்லெஸ் ஹெட்போன்களான ஏர்பாட்ஸ் விற்பனைக்கு வழங்கப்பட்டன. உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வயர்லெஸ் ஹெட்போன்களின் விற்பனை உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. 

ஹெட்போன் ஜாக் இல்லாத ஐபோன் 7 சாதனங்களில், ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஹெட்போன்களை பயன்படுத்த முடியும். ஏர்பாட்ஸ் விலை 159 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஹெட்போனினை ப்ளூடூத் மூலமாக மட்டுமே இணைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தை இணைத்து பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். 

* முதலில் ஏர்பாட்ஸ்களை சார்ஜிங் டாக்கில் வைக்க வேண்டும். பின் அதன் மூடியை திறந்து, கேசின் பின் இருக்கும் சிறிய பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதனை சில நொடிகள் அழுத்தினால் அதில் இருந்து வெள்ளை நிற விளக்கு எரியும். 

* இவ்வாறு விளக்கு எரியும் போது ஏர்பாட்ஸ் பேரிங் மோட் (Pairing Mode) ஆன் ஆகியிருப்பதை உணர்த்தும், இனி ஆண்ட்ராய்டு சாதனத்தின் ப்ளூடூத் செட்டிங்ஸ் சென்று ஏர்பாட்சை தேர்வு செய்ய வேண்டும். 

* இவ்வாறு செய்ததும் ஏர்பாட்ஸ் உங்களின் ஆண்ட்ராய்டு போனுடன் இணைக்கப்பட்டு விடும். இதே போல் ப்ளூடூத் இணைப்பு பெற்ற விண்டோஸ் கணினியிலும் மேற்கொள்ள முடியும். இவை ப்ளூடூத் பட்ஸ் போன்று இயங்கும். 

* இனி மெலிதாக தட்டினாலே ஏர்பாட்ஸ்-ல் இசை நின்றுவிடும். இது அனைத்து சாதனங்களிலும் பொருந்தும். இதே போல் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பயன்படுத்தும் போது சிரி உடனடியாக ஆக்டிவேட் ஆகாது, எனினும் உங்களால் இசையை அனுபவிக்க முடியும். 

Similar News