தொழில்நுட்பம்

ஆரவாரமின்றி வெளியான எல்ஜி X பவர் 2: சிறப்புகள் என்ன?

Published On 2017-02-24 22:39 GMT   |   Update On 2017-02-24 22:39 GMT
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன்பே எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
சியோல்: 

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன்பே எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கிறது, எல்ஜி X பவர் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இலத்தீன் அமெரிக்காவிலும், அதன்பின் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் இதர பகுதிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை அழகாக எடுக்க மென்மையான எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. எல்ஜி X பவர் 2 ஸ்மார்ட்போன் நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.



கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை எல்ஜி X பவர் 2 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி ஓடிஜி மற்றும் 4500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் இதில் வழங்கப்பட்டுள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்து 50 சதவிகித சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எல்ஜி நிறுவனத்தின் G6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, பெரிய டிஸ்ப்ளே மற்றும் டூயல் கேமரா அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News