தொழில்நுட்பம்

நோக்கியா 6 விற்பனை: 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்

Published On 2017-01-13 16:26 GMT   |   Update On 2017-01-13 16:26 GMT
எச்எம்டி நிறுவனம் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இவற்றின் முன்பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பீஜிங்:

எச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த வாரம் புதிய நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விற்பனை சீனாவின் JD.com தளத்தில் ஜனவரி 19 ஆம் தேதி பிளாஷ் முறையில் நடைபெற இருக்கிறது. 

பிளாஷ் விற்பனைக்கு முன் நடைபெறும் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 250,000 பேர் நோக்கியா 6 வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் முன்பதிவில் நோக்கியா 6 அதிகளவு வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பழைய நோக்கியா மீண்டும் விற்பனையில் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

பட்ஜெட் ரகத்தில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 6 இந்திய மதிப்பில் ரூ.16,750 விலையில் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட கழற்ற முடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.  

யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் மற்றும் 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் சீரான சத்தத்தை அனுபவிக்க முடியும்.

Similar News