தொழில்நுட்பம்

இண்டர்நெட்டில் லீக் ஆன மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போன்: விரைவில் வெளியீடு?

Published On 2017-01-01 08:23 GMT   |   Update On 2017-01-01 08:23 GMT
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புதிய புகைப்படங்களின் மூலம் சர்ஃபேஸ் போனின் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்:

புதிய சர்ஃபேஸ் போன் சார்ந்த தகவல்களை எப்படி பாதுகாத்தாலும், சில புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து விடுகின்றன. அதன் படி புதிய சர்ஃபேஸ் போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. புதிய புகைப்படத்தில் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் மற்றும் கேமரா அம்சங்கள் உள்ளிட்டவை தெரியவந்துள்ளது.  

சீனாவின் வெய்போ தளத்தில் அம்பலமாகி இருக்கும் புதிய புகைப்படங்களில், சர்ஃபேஸ் போனின் வடிவமைப்பு செங்கல் போன்று காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவ கேமரா மற்றும் Carl Zeiss டேக் மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை கொண்டுள்ளது. 

போனின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் ஒற்றை-கிரில் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது, சரியாக மாட்யூலின் கீழ் மைக்ரோசாப்ட் சின்னம் ( விண்டோஸ் லோகோ ) பொருத்தப்பட்டுள்ளது. போனின் முன்பக்கம் கேமராவின் பக்கத்தில் இடது புறமாக மைக்ரோசாப்ட் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது.  

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போனின் கீழ்பக்கமாக மூன்று கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் கொண்ட பட்டன்களை வழங்கியுள்ளது. இத்துடன் வழக்கமான வால்யூம் ராக்கர் பட்டன் மற்றும் பவர் பட்டன் உள்ளிட்டவையும், கூடுதலாக கேமரா ஷட்டர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. 

யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் போனின் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் குறித்து மைக்ரோசாப்ட் சார்பில் எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை என்ற நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.. 

Similar News