உலகம்
கோப்பு படம்

உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைய ரஷிய படைகள் கெடு

Published On 2022-03-21 22:48 GMT   |   Update On 2022-03-22 00:15 GMT
ரஷ்யாவின் எச்சரிக்கைக்கு உக்ரைன் ஒரு போதும் அடிபணியாது என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

அந்த வணிக வளாகத்தை உக்ரைன் ராணுவத்தினர் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை சேமிக்க பயன்படுத்தி வருவதை அறிந்த ரஷிய படையினர் தாக்குதல் நடத்தியதாக  அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்ற ரஷ்ய படையினர் விடுத்திருந்த எச்சரிக்கையை உக்ரேனிய அதிகாரிகள் நிராகரித்தனர். 

உக்ரைன் தென்கிழக்கு நகரங்களில் இருக்கும் உக்ரேனியர்கள் அதிகாலை 
5 மணிக்குள் சரணடையுமாறும், அவ்வாறு செய்பவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ரஷிய படையினர் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கைகளுக்கு, உக்ரைன் ஒருபோதும் அடிபணியாது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News