செய்திகள்
உலக தலைவர்களுடன் முன்களப் பணியாளர்கள்

ஜி20 மாநாடு- மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்களப் பணியாளர்கள்

Published On 2021-10-30 10:18 GMT   |   Update On 2021-10-30 10:18 GMT
இத்தாலி பிரதமர் மரியோ டிராகியை இந்திய பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாநாடடில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, தனி விமானத்தில் இத்தாலி சென்றார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று இத்தாலி பிரதமர் மரியோ டிராகியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று வாடிகன் சிட்டியில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். அதன்பின்னர் அங்கிருந்து ஜி20 மாநாடு நடைபெறும் ரோமா மாநாட்டு மையத்தை சென்றடைந்தார் மோடி. அவரை இத்ததாலி பிரதமர் மரியோ டிராகி வரவேற்று மாநாட்டு மேடைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மோடி மற்றும் உலக தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களுடன் முன்களப் பணியாளர்களும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Tags:    

Similar News