செய்திகள்
இங்கிலாந்து ராணி எலிசபெத்

ராணி இரண்டாம் எலிசபெத் மருத்துவமனையில் ஏன் தங்கினார்? பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்

Published On 2021-10-21 22:30 GMT   |   Update On 2021-10-21 22:30 GMT
மருத்துவர்கள் அளித்த ஆலோசனையை தொடர்ந்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அயர்லாந்து பயணத்தை ரத்து செய்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), வடக்கு அயர்லாந்துக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.
 
இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி இரண்டாம் எலிசபெத் வடக்கு அயர்லாந்திற்கான பயணத்தை திடீரென ரத்துசெய்துள்ளார். ராணி மருத்துவமனையில் ஒரு இரவை கழித்தார் என்று குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மகாராணியார் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்தனர். இதையடுத்து, கடந்த புதன் கிழமை பிற்பகல் வழக்கமான சோதனைகளுக்காக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனையில் இருந்தார். நேற்று மதியம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்கு திரும்பி விட்டார் என தெரிவித்தார். மகாராணியார் தற்போது நல்ல மனநிலையில் உள்ளார் என்பதையும் உறுதி செய்தார். 

பத்திரிகை நிறுவனம் அளித்த சிறந்த முதியவருக்கான விருதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News