செய்திகள்
கோப்புபடம்

மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

Published On 2021-09-08 06:42 GMT   |   Update On 2021-09-08 11:53 GMT
மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பெப்லோமாடரோ என்ற இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மெக்சிகோ சிட்டி:

வடஅமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தலைநகரம் மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பெப்லோமாடரோ என்ற இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பெப்லோமாடரோ மெக்சிகோவின் முக்கிய சுற்றுலா தலமாகும். ஏராளமான உணவு விடுதிகள் இங்கு உள்ளன. நிலநடுக்கத்தால் இந்த நகரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 7 புள்ளிகளாக இருந்தன.

இதனால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியது. மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

நிலநடுக்கம் பெரிய அளவில் இருந்தாலும் இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. அங்குள்ள கிராமப்பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முக்கிய பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இனிமேல்தான் பாதிப்பு குறித்து தெரிய வரும்.

Tags:    

Similar News