செய்திகள்
ஜனாதிபதி டிரம்ப்

ஆட்சியில் இருந்து வெளியேறும் கடைசி நாளில் முன்னாள் ஆலோசகர் உட்பட 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்

Published On 2021-01-20 20:20 GMT   |   Update On 2021-01-20 20:20 GMT
பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு டிரம்ப் கடைசி நாளில் பொதுமன்னிப்பு வழங்கினார்.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தண்டனை குறைப்பு மற்றும் மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். டிரம்ப் இப்படி பொது மன்னிப்பு வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவருக்கு நெருக்கமானவர்களே.



தனது மகள் இவான்கா டிரம்பின் மாமனார் சார்லஸ் குஷ்னர், டிரம்ப்பின் தேர்தல் பிரசார மேலாளர் பால் மனாபோர்ட், முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் உள்ளிட்டோருக்கு அவர் பொது மன்னிப்பு வழங்கினார்.

இந்த நிலையில் ஆட்சியில் இருந்து வெளியேறும் கடைசி நாளிலும் டிரம்ப் தனக்கு நெருக்கமானவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

அதன்படி பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு டிரம்ப் கடைசி நாளில் பொதுமன்னிப்பு வழங்கினார்.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும், ஸ்டீவ் பானனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News