செய்திகள்
பச்சை நிற நாய்க்குட்டி

அமெரிக்காவில் பிறந்த பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி

Published On 2020-01-17 11:21 GMT   |   Update On 2020-01-17 14:10 GMT
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு நாய் பச்சை நிற நாய்க்குட்டியை ஈன்றது. அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என அதன் உரிமையாளர் பெயரிட்டுள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஹேவுட் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷனா ஸ்டேமி. இவர் ஜிப்சி எனும் பெயருடைய ஜெர்மன் ஷெப்பர்டு ரக வகையைச் சார்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் இன்று காலை 8 குட்டிகளை ஈன்றது.

அவற்றில் 4 வதாக பிறந்த ஒரு ஆண் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்ததை கண்டு அதன் உரிமையாளர் ஆச்சரியமடைந்தார். இதையடுத்து அந்த குட்டியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இது தற்போது வைரலாகி வருகிறது. 



இது குறித்து விலங்கின ஆய்வாளர்கள் கூறுகையில், ‘அந்த நாய்க்குட்டியின் நிறத்திற்கு சாதாரண விளக்கங்கள் தர முடியும். உதாரணமாக, நாய்க்குட்டி வயிற்றுக்குள் இருந்தபோது தாயின் கர்ப்பப் பையிலிருந்து வந்த திரவம் அந்த குட்டியை கறை படுத்தியிருக்கலாம். ஆனால் அது எந்தவிதமான கதிர்வீச்சிற்கும் உட்படவில்லை’ என தெரிவித்தனர்.  

‘பச்சை நிற குட்டி மற்ற குட்டிகளைப் போல சாதாரணமாகவே உள்ளது. அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என பெயரிட்டுள்ளோம்’ என அதன் உரிமையாளர் தெரிவித்தார். 

Tags:    

Similar News