செய்திகள்
கோப்புப்படம்

177 நாடுகளில் இயங்கும் அமெரிக்க ராணுவம்

Published On 2020-01-08 07:45 GMT   |   Update On 2020-01-08 07:46 GMT
அமெரிக்க ராணுவத்தில் சுமார் 21 லட்சம் வீரர்கள் உள்ளனர். சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்கள் 177 நாடுகளில் முகாம் அமைத்து இருக்கிறார்கள்.
வாஷிங்டன்:

ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் உருவாகி உள்ள நிலையில், அமெரிக்காவின் ராணுவ வலிமை பற்றிய தகவலைப் பார்ப்போம்.

அமெரிக்கா ராணுவத்தில் சுமார் 21 லட்சம் வீரர்கள் உள்ளனர். அதிகளவு போர் விமானங்களையும், கடற்படை கப்பல்களையும் அமெரிக்காவே வைத்துள்ளது. அமெரிக்காவின் சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்கள் 177 நாடுகளில் முகாம் அமைத்து இருக்கிறார்கள். உலகம் முழுக்க அமெரிக்காவுக்கு 800 இடங்களில் ராணுவ தளங்கள் உள்ளன. இன்று ஏவுகணை வீச்சை சந்தித்த ஈராக்கில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். வளைகுடா நாடுகள் அனைத்திலும் அமெரிக்க வீரர்கள் இருக்கிறார்கள்.

குவைத், கத்தாரில் அதிகப்பட்சமாக 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஜோர்டானில் 3 ஆயிரம், சிரியாவில் 800, சவுதிஅரேபியாவில் 3 ஆயிரம், துருக்கியில் 2,500, பக்ரைனில் 7 ஆயிரம், ஓமனில் 600, ஆப்கானிஸ்தானில் 1,400 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், தென்கொரியா நாடுகளில் அமெரிக்காவின் பிரமாண்டமான கடற்படை உள்ளது.
Tags:    

Similar News