செய்திகள்
மீட்பு பணி நடைபெறும் கடல் பகுதி

தென்கொரியாவில் மீட்பு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து- 7 பேரின் கதி என்ன?

Published On 2019-11-01 08:19 GMT   |   Update On 2019-11-01 08:19 GMT
தென்கொரியாவில் தீயணைப்புத் துறைக்கு சொந்தமான மீட்பு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சியோல்:

தென்கொரிய தீயணைப்புத் துறைக்கு சொந்தமான எச்225 சூப்பர் பூமா ஹெலிகாப்டர் இன்று அதிகாலை டோக்டோ தீவில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட சிறிது நேரத்தில் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே உள்ள பொது கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களைத் தேடும் பணியில் தென்கொரிய கடலோர காவல் படை மற்றும் தனியார் படகுகள் ஈடுபட்டுள்ளன. நீர்மூழ்கி வீரர்கள் கடலில் குதித்து ஹெலிகாப்டரை தேடி வருகின்றனர். 

காயமடைந்த மாலுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில், இரண்டு அனுபவம் வாய்ந்த பைலட்டுகள், தீயணைப்பு வீரர்கள் என 7 பேர் பயணித்தனர். நீண்ட நேரம் தேடியும் 7 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

விபத்து ஏற்பட்டதையடுத்து எக்225 ரக ஹெலிகாப்டர்களின் பாதுகாப்பு தன்மை குறித்து உடனடியாக சரிபார்க்கும்படி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டுள்ளார். 


Tags:    

Similar News