செய்திகள்
காந்தி சிலை திறப்பு

இலங்கை பிரதமர் மாளிகையில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு

Published On 2019-10-02 11:48 GMT   |   Update On 2019-10-02 11:48 GMT
காந்தி ஜெயந்தி தினமான இன்று இலங்கை பிரதமரின் மாளிகையில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. நினைவு தபால் தலைகளும் வெளியிடப்பட்டன.
கொழும்பு:

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி நமது இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்த ’தேசப்பிதா’ மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் காந்தி ஜெயந்தி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



இந்நிலையில், கொழும்பு நகரில் உள்ள இலங்கை பிரதமரின் மாளிகையில் செம்பினால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று திறந்து வைத்தார். காந்தியின் நினவை போற்றும் வகையில் இரு நினைவு தபால் தலைகளும் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில் இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.



இதேபோல், இலங்கை அதிபர் மாளிகையிலும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இலங்கையில் 1927-ம் ஆண்டில் காந்தி சுற்றுப்பயணம் செய்த யாழ்ப்பாணம் நகரிலும் இன்று காந்தி ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Tags:    

Similar News