செய்திகள்
தீப்பற்றி எரியும் ஆலையை சுற்றியுள்ள புகை மூட்டம்

சவுதி அரசின் மிகப்பெரிய பெட்ரோல் உற்பத்தி ஆலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல்

Published On 2019-09-14 10:07 GMT   |   Update On 2019-09-14 10:07 GMT
சவுதி அரேபியாவின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய அளவு சேதம் ஏற்பட்டது.
ரியாத்:

சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்தகரிப்பு ஆலையின் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

நாளொன்றுக்கு சுமார் 70 லட்சம் பெட்ரோலிய கச்சா எண்ணையை சுத்திகரிக்கும் அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.



இதேபோல், குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெட்ரோல் கிணற்றின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து, பின்னர் அணைக்கப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் அண்டைநாடாக இருந்து பகைநாடாக மாறிய ஏமன் தரப்பில் இருந்து ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Tags:    

Similar News