செய்திகள்
அரியவகை ‘கீடா ஜடி’ மூலிகை வேர்

அரியவகை ‘கீடா ஜடி’ மூலிகை வேர்களை கடத்திய பூடானியர்கள் 3 பேர் கைது

Published On 2019-08-20 10:25 GMT   |   Update On 2019-08-20 10:25 GMT
இந்திய-பூடான் எல்லையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ‘கீடா ஜடி’ எனப்படும் மூலிகையை கடத்திய பூடான் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜல்பைகுரி:

கீடா ஜடி என்பது மருத்துவ குணம் நிறைந்த அரிய வகை மூலிகை வேர் ஆகும். இது, இந்தியாவில் இமயமலை எல்லையின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இது புற்றுநோய்க்கு மருந்தாகவும், எப்போதும் இளமையான தோற்றப் பொலிவை தரவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சீனாவில் இதன் மதிப்பு தங்கத்தை விட அதிகமாகும். இந்த மூலிகைக்கு வரவேற்பு அதிகம் உள்ளதால், அது சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா, பூடான் எல்லையில் உள்ள மேற்கு வங்காள மாநிலம் ஜெய்கான் நகரில் 5 கிலோ கீடா ஜடி மூலிகையை கடத்தியதற்காக பூடான் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கீடா ஜடி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய ஆயுத காவல் படை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கிலோ அளவிலான கீடா ஜடி மூலிகை வேர் கைப்பற்றப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு 1 கோடி ரூபாய் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News