செய்திகள்

மலாவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி

Published On 2019-03-09 04:02 GMT   |   Update On 2019-03-09 04:02 GMT
மலாவியில் இடைவிடாமல் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். #MalawiRain
பிளான்டையர்:

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் 1 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேரைக் காணவில்லை. ராணுவம் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர்.

இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த வாரம் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MalawiRain

Tags:    

Similar News