செய்திகள்
நீக்கப்பட்ட பிரதமர்

ஏமன் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர் அதிரடி நீக்கம் - அதிபர் மன்சூர் ஹாதி நடவடிக்கை

Published On 2018-10-16 05:40 GMT   |   Update On 2018-10-16 05:40 GMT
ஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி. #YemenPrimeMinister
சனா:

ஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016-ம் ஆண்டு நீக்கி அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ புதிய பிரதமராக்கினார் அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி. கடந்த 2016-ல் இருந்து அஹமத் ஒபைட் பின் டக்ர் பிரதமராக செயலாற்றி வந்தார்.

ஏமன் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரழிந்து வருவதாக பெரும்பாலான மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வலுத்தன.

அபட் ரப்போ மன்சூர் ஹாதி

இந்நிலையில் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி நேற்று அதிரடியாக நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக 38 வயதான மயீன் அத்துல் மலேக்-ஐ புதிய பிரதமராக நியமித்துள்ளார். சலேம் அஹமது சயீத்தை துணை பிரதமராக நியமித்துள்ளார்.

சமீப காலங்களாக அரசின் பொருளாதாரம் மற்றும் சேவைத்துறைகளில் அலட்சியமாக செயல்பட்டதால் அதிபர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News