செய்திகள்

கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் வசதி

Published On 2018-07-18 07:00 GMT   |   Update On 2018-07-18 07:00 GMT
50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. #Cubainternet

ஹவானா:

50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண் மூடி தூங்கும் வரை எப்போதும் 4ஜி வேகத்தில் செல்போனில் இன்டர் நெட் பார்க்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கலாம்.

ஆனால் பல மாற்றங்களை கண்டிருக்கும் கியூபா இப்போது தான் முழு இணைய சேவை (இன்டர் நெட்) வசதியை பெற உள்ளது. இந்த மாற்றத்துக்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.

அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்த கியூபா சோவியத் ரஷியா உடைந்த சில மாதங்களில் பெரிய பாதிப்பை சந்தித்தது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சி பெற்றன.


ஆனால் எதிரி நாடான அமெரிக்காவின் கெடு பிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளது. தற்போது இங்கு 2ஜி நெட் வொர்க் மட்டுமே உள்ளது. அதில் வீடியோக்கள் பார்க்க முடியாது. பயன்படுத்தும் நெட்வொர்க்கும் மிக மெதுவாக இருக்கும். அந்த நெட் வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அங்கு உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் கிடையாது. ஏனெனில் அங்கு தொலை தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனால் அங்கு இணையம் (நெட்வொர்க்) என்பது ஒரு பெரிய ஆடம்பர கனவு போல இருந்தது. #Cubainternet

Tags:    

Similar News