செய்திகள்

போலியோ நோயை குணப்படுத்த ஒரு ஊசி மருந்து போதும் - அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடித்தனர்

Published On 2018-05-23 06:46 GMT   |   Update On 2018-05-23 06:46 GMT
ஒரே ஊசி மருந்து மூலம் போலியோ நோயை குணப்படுத்த கூடிய மருந்தை அமெரிக்காவின் மகாசூடெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. #PolioDisease

நியூயார்க்:

போலியோ என்னும் இளம் பிள்ளைவாதம் நோயை உலகில் இருந்து அறவே ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 தடவை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

முதல் தடவை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட 25 நாள் கழித்து மீண்டும் கொடுக்கப்படுகிறது. இருந்தும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட வில்லை.

அங்கு மிகவும் உள்ளடங்கிய கிராமம் மற்றும் மலைப் பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்க முடியவில்லை. அங்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது.

எனவே ஒரே ஊசி மருந்து மூலம் போலியோ நோய் தடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்தகைய மருந்தை அமெரிக்காவின் மகாசூடெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது.

ஊசி மருந்தில் பல ‘டோஸ்’கள் கலக்கப்பட்டுள்ளது. எனவே அதை ஒரு தடவை பயன்படுத்தினால் போதும். இந்த தகவலை அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி அனாஜேக்லெனக் தெரிவித்தார். இந்த போலியோ ஊசி மருந்து எலிகளின் உடலில் செலுத்தப்பட்டு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் போலியோ வைரஸ்கள் அழிக்கப்பட்டிருந்தது. எனவே, இதை குழந்தைகளுக்கும் பயன் படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். #PolioDisease

Tags:    

Similar News