செய்திகள்

லண்டனில் நச்சுத்தாக்குதலில் சிக்கிய ரஷிய முன்னாள் உளவாளி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்

Published On 2018-05-18 10:46 GMT   |   Update On 2018-05-18 10:46 GMT
பிரிட்டன் நாட்டில் நச்சுத்தாக்குதலால் சிகிச்சைபெற்றுவந்த ரஷிய முன்னாள் உளவாளி செர்ஜய் ஸ்கிர்பால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #SergeiSkripal
லண்டன்:

ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த மார்ச் 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

 

லண்டன் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நலம் தேறிய யூலியா ஸ்கிர்பால் கடந்த மாதம் 9-ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், செர்ஜய் ஸ்கிர்பால் உடல்நலம் தேறியதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவருவரும் பாதுகாப்பான மற்றும் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என பிரிட்டன் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #SergeiSkripal
Tags:    

Similar News