செய்திகள்

அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராகிறார், நோர்வுஸ் மாமேடோவ்

Published On 2018-04-21 09:33 GMT   |   Update On 2018-04-21 09:33 GMT
அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக நோர்வுஸ் மாமேடோவ் பதவியேற்க அந்நாட்டின் பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பாக்கு:

ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியன் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கஸ் மலைப்பகுதியில் அசர்பைஜான் நாடு அமைந்துள்ளது.

சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் இந்நாட்டின் முக்கிய வருமானமாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி கருதப்படுகிறது.

இந்நாட்டின் அதிபராக இல்ஹாம் அலியேவ் பொறுப்பேற்றுள்ளார். அதிபரின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக பணியாற்றிவந்த நோர்வுஸ் மாமேடோவ் என்பவரை புதிய பிரதமராக நியமிக்க அசர்பைஜான் நாட்டின் பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #tamilnews

Tags:    

Similar News