செய்திகள்

நுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை - ஆய்வில் தகவல்

Published On 2018-04-17 05:34 GMT   |   Update On 2018-04-17 05:34 GMT
உலகம் முழுவதும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை புதிய சிகிச்சை முறை மூலம் நீட்டிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். #lungcancer #chemotherapy #immunotherapy
நியூயார்க்:

புற்றுநோய் என்பது முழுவதும் குணப்படுத்த முடியாத ஒரு கொடூர நோயாக கருதுப்படுகிறது. குறிப்பாக பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலமாக இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.

அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருத்துவ சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலமாக நுரையீரல் புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது. கீமோதெரபி முறையில் பொதுவாக மருந்துகளை வாய் மூலமாகவோ, ஊசிகளின் மூலமாகவோ உடலின் உட்செலுத்தி, புற்றுநோயைக் கட்டுப்படுத்தி, அதனை குணப்படுத்த முயல்வர். கீமோதெரபி நோயின் தன்மைக்கேற்ப மாறுபடும். ஆனால் இம்முறையில் நோய் முழுமையாக குணமடையாது.

இந்நிலையில், கீமோதெரபியுடன். இம்யுனோதெரபியையும் இணைத்து சிகிச்சை அளித்தால் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 'இம்யுனோதெரபியின் போது அளிக்கப்படும் பெம்பிராலிசுமா மருந்தை கீமோதெரபி சிகிச்சையுடன் வழங்கும் போது நுரையீரல் புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தை பாதியாக குறைக்கிறது. கீமோதெரபி சிகிச்சையை மட்டும் தனியாக செய்வதை விட இது அதிக பலன் அளிக்கிறது. நோயாளிகளை அதிக நாள் வாழ வைக்கிறது'.

இந்த சிகிச்சை முறை 616 நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் உள்ள நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிக அளவில் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. #lungcancer #chemotherapy #immunotherapy

Tags:    

Similar News