செய்திகள்

பாகிஸ்தான் தலிபான் தலைவர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.32 கோடி பரிசு- அமெரிக்கா அறிவிப்பு

Published On 2018-03-09 10:56 GMT   |   Update On 2018-03-09 10:56 GMT
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான தலிபான் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுல்லா பதுங்கியுள்ள இடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.32 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

பாகிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் மவுலானா பஸ்லுல்லா. இவர் பல பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தார். குறிப்பாக இவரது இயக்கத்தினர் 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளி மீது நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல பயங்கரவாத தாக்குதலுக்கு இவர் மூளையாக செயல்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் மவுலானா பஸ்லுல்லாவுக்கு சொந்தமான இடத்தை இலக்காக வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பஸ்லுல்லா தப்பிவிட்டதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 21 தலிபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

இதையடுத்து, பஸ்லுல்லா பதுங்கியுள்ள இடம் குறித்த தகவல் கூறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர் (ரூ.32.5 கோடி) பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதேபோல் ஜமாத் உல் அஹ்ரர் அமை,பபின் அப்துல் வாலி, லஷ்கர் இ இஸ்லாம் தலைவர் மங்கள் பாக் ஆகியோரின் தலைக்கு 3 மில்லியன் டாலர் (ரூ.19.5 கோடி) அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு அதிகாரிகளை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் டெக்மினா ஜான்குவா சந்தித்து பேசிய நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News