செய்திகள்

இங்கிலாந்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டரில் 4.9 அலகுகளாக பதிவு

Published On 2018-02-17 18:01 GMT   |   Update On 2018-02-17 18:01 GMT
இங்கிலாந்தின் பிரிஸ்டால் பகுதியில் இன்று மாலை ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #EnglandEarthquake
லண்டன்:  

இங்கிலாந்தின் பிரிஸ்டால் பகுதியில் இன்று மாலை ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீ நகரில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், 7.4 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்பகுதியில் இவ்வாறான நிலநடுக்கங்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் என பிரிட்டன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #EnglandEarthquake #Earthquake #tamilnews
Tags:    

Similar News