செய்திகள்

தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய ஈராக் மக்களுக்கு 20 மில்லியன் டாலர் உதவி - இந்தியா உறுதி

Published On 2018-02-15 06:14 GMT   |   Update On 2018-02-15 06:14 GMT
ஈராக் நாட்டில் மறுகட்டமைப்பு பணிகளுக்கு 20 மில்லியன் டாலர் நிதி மற்றும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார். #Iraq
குவைத்:

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி நாடாக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர்.

அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை கை கொடுத்தது. இந்த கூட்டுப் படையின் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் உட்பட அனைத்து நகரங்களும் முழுமையாக மீட்கப்பட்டன. இதனையடுத்து, போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்காக, குவைத்தில் நன்கொடையாளர் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே. அக்பர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், 'ஈராக்கில் உள்நாட்டு போரால் சேதமடைந்த நகரங்களின் சீரமமைப்பு பணிகளுக்கு 20 மில்லியன் டாலர்  வழங்கப்படும். மேலும் உலக உணவு திட்டத்தின் மூலம் ஈராக் மக்களுக்கு தேவையான பால் மற்றும் உணவு அளிக்கப்படும். பள்ளி குழந்தைகள் மற்றும் சிரியாவில் உள்ள ஈராக் அகதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்

ஈராக் அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சி இந்தியா சார்பாக அளிக்கப்படும். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற ஈராக் மக்கள் மற்றும் அரசிற்கு எனது வாழ்த்துக்கள்' என தெரிவித்தார். #Iraq #kuwaitconference #tamilnews

Tags:    

Similar News