செய்திகள்

உடலுக்கு வெளியே இதயம் கொண்ட குழந்தை - உயிர்பிழைத்த அதிசயம்

Published On 2017-12-13 12:38 GMT   |   Update On 2017-12-13 12:38 GMT
இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயம் இருக்கும் நிலையில் பிறந்த குழந்தை உயிருடன் இருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்:

இங்கிலாந்தை சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி பிண்ட்லே (31). நயோமி கர்ப்பமாக இருந்த நிலையில் அவரின் ஒன்பது வார கர்ப்பத்தின் போது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது, அவர் வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வெளிப்பகுதியில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நயோமிக்கு லியிசெஸ்டர் நகரில் உள்ள கிளின்பீல்ட் மருத்துவமனையில் சிசேரின் மூலம் பெண் குழந்தை பிறந்தது.



ஸ்கேனில் தெரிந்தபடி குழந்தையின் இதயம் முழுவதும் உடலின் வெளிப்பகுதியில் இருந்தது. இது போன்ற நிலையில் பிரிட்டனில் பிறந்த குழந்தை எதுவும் உயிர் பிழைக்காத நிலையில் வன்னிலோப் என பெயரிடப்பட்ட இக்குழந்தையை மருத்துவர்கள் சில முக்கிய அறுவை சிகிச்சைகள் செய்து உயிர் பிழைக்க வைத்துள்ளார்கள்.

குழந்தையின் இதயம் மார்பின் உள்ளே தற்போது வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நயோமி கூறுகையில், 'வன்னிலோப்பின் நிலை குறித்து பிரசவத்துக்கு முன்னரே மருத்துவர்கள் கூறியது எனக்கு கவலையளித்தது. குழந்தை பிறந்த முதல் பத்து நிமிடம் முக்கியமானது என மருத்துவர்கள் கூறிய நிலையில் அவள் பிழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என கூறியுள்ளார். பிறக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளில் 5 லிருந்து 8 குழந்தைகள் வரை இதயம் வெளியில் இருக்கும் பிரச்சனை கொண்டு பிறப்பதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.
Tags:    

Similar News