செய்திகள்

ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் முடிவுக்கு மேற்கு ஆசிய நாடுகளில் கொந்தளிப்பு

Published On 2017-12-11 05:50 GMT   |   Update On 2017-12-11 05:50 GMT
ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெருசலேம்:

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று லெபனான், இந்தோனேசியா, எகிப்து மற்றும் பாலஸ்தீனத்திலும் போராட்டம் நடைபெற்றது. லெபனானில் அமெரிக்க தூதரகம் அருகே ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் பாலஸ்தீன் மற்றும் லெபனான் கொடிகளை கைகளில் ஏந்திய படி இருந்தனர். டிரம்புக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினர். நிலைமை மோசமானதால் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டகள் வீசப்பட்டன. குழாய்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இத் தாக்குதல்களில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்க தூரகம் அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் அல்-அசார் பல்கலைக்கழகம் மற்றும் மற்றொரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் அல்- அரூப் அகதிகள் முகாமில் போராட்டமும் அதை தொடர்ந்து மோதலும் ஏற்பட்டது. கலவரக்காரர்களை அடக்க போலீசார் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். அதில் பலர் காயம் அடைந்தனர்.
Tags:    

Similar News