செய்திகள்

சீனாவில் ராணுவ புரட்சியை முறியடித்த அதிபர் ஜி ஜின்பிங்

Published On 2017-10-21 09:49 GMT   |   Update On 2017-10-21 09:49 GMT
சீனாவில் தண்டிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் ராணுவ புரட்சி மேற்கொண்ட முயற்சியை அதிபர் ஜி ஜின்பிங் முறியடித்துள்ளார்.

பெய்ஜிங்:

சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக 2-வது தடவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் 5 ஆண்டுகள் சீன அதிபராக பதவி வகிப்பார்.

இவர் தனது ஆட்சி காலத்தில் ஊழலை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கை மேற் கொண்டார். அரசு உயர் பதவிகளில் இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். தொடர்ந்து ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதனால் ஆத்திரம் அடைந்த உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜி ஜின்பிங்குக்கு எதிராக ராணுவ புரட்சி நடத்தி அவரை பதவி இழக்க செய்ய திட்டமிட்டனர். ஆனால் அவர்களின் அந்த முயற்சியை ஜி ஜின்பிங் முறியடித்தார்.

இந்த தகவலை சீன பாதுகாப்பு ஒழுங்கு கமி‌ஷனின் தலைவர் லியு ஷியூ தெரிவித்தார். ராணுவ புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்ட சீன கம்யூனிஸ்டு முன்னாள் தலைவர் சாங்கிங், சன் ஷெங்காய் அவரது மனைவி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை மேற் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News