செய்திகள்

வேலையில்லா திண்டாட்டத்தால் தான் மோடியும், டிரம்பும் பதவிக்கு வந்தனர்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

Published On 2017-09-20 08:20 GMT   |   Update On 2017-09-20 08:20 GMT
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டத்தால் தான் பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் பதவிக்கு வந்தனர் என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 15 நாள் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வேலையில்லா திண்டாட்டத்தால் தான் பதவிக்கு வந்துள்ளனர் என ந்னைக்கிறேன். வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சனையை மக்கள் சந்திக்க உள்ளனர். எனவே, அவர்கள் இந்த இரு தலைவர்களுக்கும் முழு ஆதரவை அளித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

டிரம்ப் என்ன செய்துள்ளார் என எனக்கு தெரியாது. ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது.

தேவைக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை. ஒரு நாளைக்கு வேலைவாய்ப்பு சந்தையில் 30000 இளைஞர்கள் இணைகின்றனர். ஆனால் இந்த அரசு தினமும் 500 பேருக்கு தான் வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது.  

வேலைவாய்ப்பற்றோர் பிரதமர் மோடி மீது ஆத்திரம் அடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களை பிரச்சனையில் இருந்து திசைதிருப்பும் பணியில் மோடி ஈடுபட்டு வருகிறார். எனவே வேலைவாய்ப்பின்மை தான் பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளதை அனைவரும் அறிவார்கள். விரைவில் இதற்கு அனைவரும் சேர்ந்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News