செய்திகள்

வான் எல்லைக்குள் பறந்த வடகொரியா மர்ம பொருள் மீது தென்கொரியா துப்பாக்கி சூடு

Published On 2017-05-24 05:56 GMT   |   Update On 2017-05-24 05:56 GMT
வான் எல்லைக்குள் பறந்த வடகொரியா மர்ம பொருள் மீது தென்கொரியா துப்பாக்கி சூடு நடத்தியது. எந்திர துப்பாக்கியால் 90 ரவுண்டு சுட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோல்:

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே 2 அணுகுண்டு சோதனைகள் மற்றும் பல ஏவுகணைகள் சோதனைகளும் நடத்தி உள்ளன.

இதற்கு அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா, ஐ.நா. சபை உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தும் வட கொரியா கண்டு கொள்ள வில்லை.

சமீபத்தில் கூட புக்குக் சாங்-2 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. இதனால் கொரிய தீப கற்பத்தில் தொடர்ந்து போர் பதட்டம் நிலவுகிறது.

எனவே வடகொரியாவின் நடவடிக்கையை தென் கொரியா தீவிரமாக உற்று கண்காணித்து வரு கிறது. இந்த நிலையில் நேற்று தென்கொரியா வான்எல்லை பகுதியில் வடகொரியாவின் மர்ம பொருள் ஒன்று பறப்பது ரேடாரில் தெரிந்தது.

இதனால் எச்சரிக்கை அடைந்த தென்கொரியா ராணுவம் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தியது. எந்திர துப்பாக்கியால் 90 ரவுண்டு சுட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா வான் எல்லைக்குள் பறந்தது என்ன பொருள் என்று அறிவிக்கவில்லை. ஆனால் அது ‘ரேடார்’ ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Tags:    

Similar News