செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

Published On 2017-04-29 01:23 GMT   |   Update On 2017-04-29 01:23 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர அதிர்வை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். சில கிராமங்களில் சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸ் மிகவும் வித்தியாசமான தன்மை கொண்ட நாடு. இந்த நாட்டில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுவது மிகவும் வழக்கமான விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டரில் 7.7 என்ற அளவில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News