செய்திகள்

மூன்றாம் உலகப்போர் மே 13-ல் தொடங்கும்: டிரம்ப் வெற்றியை சரியாக கணித்த தீர்க்கதரிசியின் பகீர் தகவல்

Published On 2017-04-22 14:18 GMT   |   Update On 2017-04-22 14:18 GMT
அமெரிக்க அதிபர் டிரம்பின் வெற்றியை சரியாக கணித்து கூறியவர், வரும் மே 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என கணித்து கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் பகைமை அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையானது, மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா? என்ற அச்சம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்துடன் தற்போது வெளியாகியிருக்கும் கணிப்பு, உலகப்போர் பற்றிய பீதியை கிளப்பி உள்ளது.

எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறிய அதிசய ஜோதிடர் நாஸ்டர்டாமஸ். இவரது கணிப்புகள் உண்மையாகவே நடந்துள்ளன. இதேபோல், கடவுளின் தூதர் என தன்னைத் தானே பிரகனம் செய்துகொண்டு பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வரும் கிளேர்வாயன்ட் ஹொராசியோ வில்லேகாஸ் என்பவர், மூன்றாம் உலகப் போர் பற்றிய கணிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பான அவரது அறிக்கை, டெய்லி ஸ்டார் பத்திரிகையில் வெளி வந்துள்ளது.


“2017-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும். அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சிரியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளும் இந்த மூன்றாம் உலகப்போரில் பங்கேற்கும். இந்த மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு டொனால்டு டிரம்ப் தான் காரணமாக இருப்பார். மே 13 முதல் அக்டோபர் 13-ம் தேதிக்குள் மூன்றாம் உலகப்போரின் பேரழிவை உலகம் சந்திக்கும். 

இந்த போரில் சிரியா அதிபர் ஆசாத் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்படுவார். அதன்பின்னர் போர் மேலும் தீவிரமடையும்” என ஹொராசியோ கணித்திருக்கிறார்.

2016-ம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என 2015-ம் ஆண்டிலேயே ஹொரசியோ சரியாக கணித்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News