செய்திகள்

பாகிஸ்தானில் பெண் பேராசிரியர் குத்திக்கொலை

Published On 2017-04-19 07:08 GMT   |   Update On 2017-04-19 07:08 GMT
பாகிஸ்தானில் அறிவியல் துறை பேரராசிரியாக பணிபுரிந்த பெண் பல்கலைக்கழக வளாக குடியிருப்பில் மர்மமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
லாகூர்:

பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் தாஹிரா பர்வீன் மாலிக்(61). இவர் அங்குள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தார். பல்கலைக்கழக வளாக குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார்.

கராச்சியில் இருக்கும் இவரது மகள் நேற்று முன்தினம் இரவு இவருக்கு போன் செய்தார். அதை அவர் எடுக்கவில்லை. எனவே சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வீட்டில் பணம், நகை கொள்ளை போகவில்லை. அவரை கொலை செய்தது யார்? காரணம் என்ன? என்று தெரியவில்லை. இவர் ஐமாத் அகமதியாக என மைனாரிட்டி வகுப்பை சேர்ந்தவர். சில நாட்களாக இந்த இனத்தவர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இது போன்று இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது கடந்த 3 வாரங்களில் நடந்த 2-வது கொலையாகும்.

Similar News