செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு செயலாளராக பெண் நியமனம்

Published On 2017-03-20 12:52 GMT   |   Update On 2017-03-20 12:52 GMT
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு செயலாளராக, பெண் ஒருவர் முதன்முறையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு செயலாளராக பதவி வகித்த ஐஜாஸ் அகமது சவுத்ரி, ஐ.நா. சபையின் தூதுவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த வெளியுறவுத்துறை செயலாளர் பதவி காலியாக இருந்தது.,

இந்நிலையில், ஐ.நா. சபையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றி வரும் தெமினா ஜன்ஜுவா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜக்காரியா கூறுகையில் “பாகிஸ்தானின் வெளியுறவு செயலாளராக தெமினா ஜன்ஜுவா இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

1984-ம் ஆண்டு வெளியுறவு பணியில் சேர்ந்த ஜன்ஜுவா, பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News