செய்திகள்

விசா கட்டுப்பாடு: ஈராக்குக்கு விதிவிலக்கு அளித்து டொனால்ட் டிரம்ப் உத்தரவு

Published On 2017-03-01 07:21 GMT   |   Update On 2017-03-01 07:21 GMT
அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் மக்களுக்கு விதிவிலக்கு அளித்து, அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் மக்களுக்கு விதிவிலக்கு அளித்து அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவினுள் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.



விசா தடையிலிருந்து ஈராக்கை நீக்கக்கோரி, பெண்டகன் மற்றும் மாநிலத்துறை வெள்ளை மாளிகைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், அமெரிக்காவில் நுழைய ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், சிரியா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட விசா தடை இன்னும் தொடர்கிறது.

Similar News