செய்திகள்

கடும் மழை, நிலச்சரிவால் சிலி தலைநகரில் குடிநீர் தட்டுப்பாடு: 40 லட்சம் மக்கள் தவிப்பு

Published On 2017-02-27 05:34 GMT   |   Update On 2017-02-27 05:34 GMT
கடும் மழை மற்றும் நிலச்சரிவால் சிலி தலைநகரில் குடிநீர் தட்டுப்பாட்டில் 40 லட்சம் மக்கள் தவிக்கின்றனர்.
சாண்டியாகோ:

தென் அமெரிக்க நாடான சிலியில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மைபோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்தன. இதனால் அதில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி ஊருக்குள் புகுந்தன. எனவே குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மைபோ ஆற்றில் இருந்து தான் சிலி தலைநகர் சாண்டியாகோவுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது ஆற்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் முழுவதும் வெளியேறிவிட்டது.



இதனால் சாண்டியாகோ நகருக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. ஏற்கனவே இருந்த குடிநீர் அனைத்தும் காலியாகிவிட்டது. தற்போது குடிநீர் இல்லாததால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். சுமார் 40 லட்சம் பேர் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்துள்ளனர்.

குடிநீர் இல்லாததால் ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை மூடும் படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மழை வெள்ளத்துக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.

அதே நேரத்தில் சிலியின் மத்திய பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்கு காட்டு தீயும் ஏற்பட்டுள்ளது.

Similar News