செய்திகள்

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த 2 காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தான் விடுவித்தது

Published On 2017-02-25 22:37 GMT   |   Update On 2017-02-25 22:37 GMT
வழி தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தான் அரசாங்கம் நல்லிணக்க அடிப்படையில் விடுவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

காஷ்மீர் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வழி தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததை தொடர்ந்து நல்லிணக்க அடிப்படையில் இருவரையும் விடுவித்துள்ளது. 

காஷ்மீர் பகுதியை சேர்ந்த 23 வயதான பிலால் அகமது மற்றும் 24 வயதான அர்பஸ் யூசப் ஆகியோர் லாக் எல்லை பகுதியில் முறையே ஜூலை 2015 மற்றும் ஜனவரி 2014 ஆம் ஆண்டு வழி தெரியாமல் இந்திய எல்லையை கடந்து பாகிஸ்தானிற்குள் சென்றதை தொடர்ந்து பாகிஸ்தானில் தவித்து வந்தனர்.  



அனைத்து வழிமுறைகளும் நிறைவுற்றதை தொடர்ந்து இருவரையும் பாகிஸ்தான் அரசு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இத்துடன் பாகிஸ்தான் அதிகாரிகள் இருவருக்கும் ஆடைகள், ஸ்வெட்டர், பேக், காலணிகள் மற்றும் இனிப்பு வகைகளை வழங்கி இருவரையும் அனுப்பி வைத்தனர்.

முன்னதாக பலமுறை பாகிஸ்தான் எல்லைக்குள் வழிதெரியாமல் நுழைந்த பல பேர் பாகிஸ்தான் அரசு சார்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த இரண்டு சிறுவர்களை பாகிஸ்தான் விடுவித்தது.

Similar News