செய்திகள்

ரஷ்யாவிற்கான ஐ.நா தூதர் விடாலி சர்கின் திடீர் மரணம்

Published On 2017-02-20 22:18 GMT   |   Update On 2017-02-20 22:18 GMT
ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா தூதர் விடாலி சர்கின் திடீரென உயிரிழந்தார். தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே அவரது உயிர் பிறிந்தது.
நியூ யார்க்:

ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் விடாலி சர்கின் தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம் ஐ.நா அலுவலகத்தில் சோககத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி மதியம் தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது அவரின் உயிர் பிறிந்ததாக ரஷ்யாவின் நிரந்தர மிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் நிரந்தர மிஷனில் சர்கினின் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த அனைவருக்கும் அவர் மரணித்த செய்தி அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கும். நாம் அனைவரும் அவரின் குடும்பத்தாருடன் இணைந்து அவரது இழப்பிற்கு இரங்கல்களை தெரிவிப்போம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தன் வாழ்நாளில் மொத்தம் 40 ஆண்டுகளை நாட்டு பணிக்காக அர்பணித்த சர்கின் 20 ஆண்டுகள் பெல்ஜியம், கனடா தூதராக பணியாற்றனார். 2006 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவிற்கான ஐ.நா தூதராக பணியாற்றி வந்தார். 

ஐ.நா தலைவர் பீட்டர் தாம்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்கின் மரண செய்தி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்ய ஃபெடரேஷன் மற்றும் ஐ.நா சபைகள் உண்மையான மகன் மற்றும் சர்வதேச அறிவாற்றலை இழந்து விட்டது என தெரிவித்தார்.

Similar News