செய்திகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தூதர் நிக்கி ஹாலிக்கு டிரம்ப் புகழாரம்

Published On 2017-02-18 20:11 GMT   |   Update On 2017-02-18 20:11 GMT
“நமக்காக மிகச்சிறப்பான பணி ஆற்றிவருகிற உங்கள் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நிக்கி ஹாலி (வயது 45) கவர்னர் பதவி வகித்து வந்தார்.

அவரை புதிய ஜனாதிபதி டிரம்ப், ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக நியமித்து அவர் பொறுப்பேற்றுள்ளார். அமெரிக்க சரித்திரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கேபினட் மந்திரி அந்தஸ்தில் பதவி பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் தெற்கு கரோலினாவில் ஒரு நிகழ்ச்சியில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நிக்கி ஹாலியை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்.

“நமக்காக மிகச்சிறப்பான பணி ஆற்றிவருகிற உங்கள் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார். அப்போது பலத்த கரவொலி எழுந்தது.

தொடர்ந்து டிரம்ப் பேசும்போது, “ஐ.நா. சபையில் அவர் நமது தூதர் என்ற வகையில் மிகச்சிறப்பான பிரதிநிதித்துவத்தை அளித்து வருகிறார். மற்றவர்களை கவருகிற வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. இப்போதே அவர் வெகு சிறப்பாக பணியாற்றுவது உண்மையிலே பெரிய விஷயம்தான்” என குறிப்பிட்டார். 

Similar News