செய்திகள்

நுரையீரல்கள் இன்றி 6  நாட்கள் உயிர் வாழ்ந்த பெண்

Published On 2017-01-28 10:30 GMT   |   Update On 2017-01-28 11:22 GMT
உறுப்பு மாற்று ஆபரே‌ஷனுக்காக நுரையீரல்கள் இன்றி 6 நாட்கள் உயிர் வாழ்ந்து பெண் சாதனை படைத்தார்.

டொரண்டோ:

கனடாவை சேர்ந்த பெண் மெலிஸ்சா பெனாய்ட் (32). இவர் பிறக்கும் போதே நுரையீரலில் நார் கட்டியுடன் கூடிய கெட்டநீர் பையுடன் பிறந்தார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செயல் இழக்க தொடங்கியது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த நுரையீரலை அகற்றி விட்டு தானமாக பெற்று மாற்று நுரையீரல் பொருத்த முடிவு செய்தனர்.

இதற்கிடையே உடல் உறுப்புகள் செயல் இழப்பதை தடுத்து அவரது உயிரை காப்பாற்ற உடனடியாக நோய் பாதித்த நுரையீரல்கள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் மாற்று நுரையீரல் தானமாக கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இருந்தாலும் மெலிஸ்கா பெனாய்ட்டின் உயிரை காப்பாற்ற அவரது 2 நுரையீரல்களும் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக சிறிய செயற்கை நுரையீரல் பெனாய்ட்டின் இதயத்துடன் பொருத்தப்பட்டது.

இதன் மூலம் அவர் சுவாசித்து உயிர் வாழ்ந்தார். ரத்த ஓட்டமும் சீரடைந்தது. நுரையீரல்கள் இன்றி செயற்கை நுரையீரலுடன் 6 நாட்கள் உயிர் வாழ்ந்தார்.

அதன் பின்னர் அவருக்கு நுரையீரல் தானமாக கிடைத்தன. இது அவருக்கு ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டது. இந்த ஆபரே‌ஷனில் 3 டாக்டர்கள் ஈடுபட்டனர்.

9 மணி நேரம் இந்த ஆப ரே‌ஷன் நடந்தது. தற்போது மெலிஸ்சா பெனாய்ட் உடல் நலத்துடன் இருக்கிறார். உலகிலேயே நுரையீரல் இன்றி 6 நாட்கள் உயிர் வாழ்ந்த முதல் மனிதர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Similar News