செய்திகள்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம்: சீனா புதிய திட்டம அறிவிப்பு

Published On 2017-01-12 21:43 GMT   |   Update On 2017-01-12 21:43 GMT
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பீஜிங்:

தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. மேலும் விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது.

இதனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேஷியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக, அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சர்ச்சக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ஆராய்ச்சி மையம் கட்டப்போவதாக சீனா புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுத்தமான எரிசக்தியை உருவாக்கும் பொறுட்டு 5 ஆண்டு திட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

Similar News