செய்திகள்

ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்

Published On 2016-12-29 12:36 GMT   |   Update On 2016-12-29 12:36 GMT
ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்டோ தெரிவித்துள்ளார்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த மே மாதம் ரோட்ரிகோ டியூடெர்டோ பதவியேற்றார். பதவியேற்ற நாளில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பில் ரோட்ரிகோ தீவிர கவனம் செலுத்தி வருகிறார். போதைப்பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் என சுமார் 6000 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன் என ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய ரோட்ரிகோ "ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வானில் இருந்து வீசி எறிவேன்" என்றார்.ஏற்கனவே, தான் இதற்கு முன்பு மேயராக பதவி வகித்தபோது மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் ரோட்ரிகோ தெரிவித்தார்.

ரோட்ரிகோவின் போதை ஒழிப்பு செயல்களுக்கு எதிர்க்கட்சிகள், மனித ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் போதைப்பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் ரோட்ரிகோ தீவிரமாக உள்ளதால் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் ரோட்ரிகோவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News