செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Published On 2016-12-17 11:51 GMT   |   Update On 2016-12-17 11:51 GMT
பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அபாயகரமான சுனாமி அலைகள் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

பப்புவா நியூ கினியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரபால் பகுதியில் இருந்து 157 கி.மீ. கிழக்கில் கடலுக்கடியில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அபாயகரமான சுனாமி அலைகள் எழுந்து கரையோர பகுதிகளை தாக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் அபாயகரமான பூகம்பங்கள் மற்றும் எரிமலைகள் வெடித்துச் சிதறும் நெருப்பு வளையத்தில் இந்த கடற்பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News