செய்திகள்

மிதமிஞ்சிய போதை மருந்தால் ஆண்டுக்கு 50,000 அமெரிக்கர்கள் இறப்பு

Published On 2016-12-09 14:52 GMT   |   Update On 2016-12-09 14:52 GMT
மிதமிஞ்சிய போதை மருந்து காரணமாக ஆண்டுக்கு 50,000 அமெரிக்கர்கள் இறப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்:

வல்லரசு நாடாகத் திகழ்ந்தாலும் போதை மருந்துகளை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்து திணறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.

அதாவது கார் விபத்து, துப்பாக்கி சூடு ஆகியவற்றால் ஓராண்டில் இறக்கும் அமெரிக்கர்களை விட போதை மருந்து பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாம். அதன்படி, ஆண்டுக்கு சுமார் 50,000 அமெரிக்கர்கள் போதை மருந்து பழக்கத்தால் இறக்கின்றனர்.

ஹெராயின் என்னும் போதை மருந்தால் 12,989 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக ஹெராயின் உட்கொள்ளுவதால் தினசரி 44 பேர் இறப்பதாக கூறப்படுகிறது.

வலி நிவாரணிகளை உட்கொள்வதால் ஆண்டுக்கு 17,536 பேர் இறக்கின்றனர். அதிகளவிலான அமெரிக்கர்கள் உயிரிழக்க இதய நோய் முதன்மைக் காரணமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News